சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சேலம்,
நிகழ்ச்சிக்கு கைப்பந்து கழக தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேல், சேர்மன் தம்பிதுரை, சாய்விடுதி இயக்குனர் ராஜாராம், கூடைப்பந்து பயிற்சியாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு கைப்பந்து கழகத்தை சேர்ந்தவர்கள், சாய் விளையாட்டு விடுதி கைப்பந்து விளையாட்டு வீரர்கள் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழகத்தின் துணை தலைவர் தமிழரசன், இணைச்செயலாளர்கள் தணசீலன், பரமசிவம், குணசேகரன், துணைச்செயலாளர்கள் நியூராஜா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.