இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

Update: 2017-04-19 22:45 GMT
திருவாரூர்,

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பேசியதாவது:-

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 173 தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் சேர இந்த கல்வி ஆண்டில் 2,353 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் மாணவர்கள் சேர, www.dge.tn.gbv.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில்...

முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகம் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் கட்டணம் இன்றி இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்