புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, 25-ந்தேதி 10 இடங்களில் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 25-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என திருவாரூரில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுபா முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் மதிவாணன், மாவட்ட செயலாளர் ஈவேரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவினை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தொடக்க கல்வித் துறைக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி(செவ்வாய்க் கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி, மாவட்ட துணை நிர்வாகிகள் சத்தியநாராயணன், வடுகநாதன், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.