மாட்டு வண்டி மீது லாரி மோதல்; தொழிலாளி பலி

சேதுபாவாசத்திரம் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதல்; தொழிலாளி பலி

Update: 2017-04-19 22:15 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமி (வயது50), சார்லஸ் (49). இருவரும் தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று தனித்தனி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி சென்று மல்லிப்பட்டினத்தில் கொட்டிவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஆரோக்கியசாமியின் மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் அவருடைய மாட்டு வண்டி முன்னால் சென்ற சார்லசின் மாட்டு வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் ஆரோக்கியசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சார்லஸ் படுகாயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்