பெரம்பலூரில் மருத்துவ அலுவலர்கள் தர்ணா போராட்டம்

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் அனுசியா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நேரு முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது, 2017-18-ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான இடங்களுக்கு இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பிதழில் குறிப்பிட்ட விதிகளின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும். 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த தர்ணா போராட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.