கத்திப்பாராவில் போராட்டம்: டைரக்டர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சங்கிலி கட்டி போராட்டம் நடத்திய டைரக்டர் கவுதமன்,

Update: 2017-04-19 22:30 GMT

ஆலந்தூர்,

கல்லூரி மாணவர்கள் அரவிந்த், உமாகார்கி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்க கோரி ஆலந்தூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை கடந்த 17–ந் தேதி விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் ஜாமீன் மனு விசாரணையை வருகிற 24–ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டைரக்டர் கவுதமனின் உறவினர்கள் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க கோரி நேற்று மனு தாக்கல் செய்தனர். ஆனால், மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் கல்லூரி மாணவர் அரவிந்த் என்பவருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்