முதுமலையில் 30 நாட்கள் நடந்த வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

முதுமலையில் 30 நாட்களாக நடைபெற்ற வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறைவடைந்தது. இதில் 25 வகை பழங்களை ருசித்து சாப்பிட்டன.

Update: 2017-04-19 00:00 GMT

மசினகுடி

தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு தமிழக அரசு சார்பாக புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடத்தபட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் இந்த முகாமில் கோவில் யானைகள் மட்டுமின்றி வனத்துறை கட்டுபாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளும் கலந்து கொள்கின்றன. இந்த ஆண்டு கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த மாதம் 20–ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது.

22 வளர்ப்பு யானைகள்

இங்குள்ளபேம்ப்பெக்ஸ் மற்றும் ஈட்டிமரா ஆகிய இரண்டு முகாம்களில் நடத்தபட்டது. இதில் முதுமலை, சந்தோஸ், இந்தர், பாமா, சங்கர் உள்பட 22 வளர்ப்பு யானைகள் கலந்து கொண்டன. யானைகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக முழு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், தினந்தோறும் அரிசி சாதம், ராகிகளி, தேங்காய், ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி, கரும்பு, வெல்லம், சத்து மாத்திரைகள் மற்றும் சத்து மாவுகள் வழங்கபட்டது. அத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களில் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, அவற்றிற்கு சிறப்பு சிகிச்சைகளும், தென்னை, கூந்தபனை, சோளம் போன்ற பசுந்தீவனங்களும் வழங்கபட்டது. மருத்துவ சிகிச்சைகளை முதுமலை கால்நடை மருத்துவர் விஜய ராகவன் தலைமையில் குழுவினர் அளித்தனர்.

முகாம் முடிவடைந்தது

இந்த நிலையில் புத்துணர்வு முகாம் நேற்று மாலையுடன் நிறைவடைந்து. அதன் நிறைவு விழா நேற்று மாலை பேம்பெக்ஸ் யானைகள் முகாமில் நடைபெற்றது. இதில் முதுமலை புலிகள் காப்பக கள உதவி வன ளஅலுவலர் சுந்தர்ராஜன்கலந்து கொண்டு யானைகளுக்கு பல்வேறு சிறப்பு உணவு பொருட்களையும், சத்து மாத்திரைகளையும் வழங்கினர். குறிப்பாக நேற்று மட்டும் 25 வகை பழங்கள் வழங்கப்பட்டன. இவற்றை யானைகள் ருசித்து சாப்பிட்டன. நிகழ்ச்சியில் முதுமலை கால்நடை மருத்துவர் விஜய ராகவன், வளர்ப்பு யானைகள் முகாமின் வனச்சரகர் ஞானதாஸ், கார்குடி வனச்சரகர் காந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் வனவர் சிவக்குமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்