தூத்துக்குடியில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி; மனைவி படுகாயம் திருமணமான 9 நாட்களில் பரிதாபம்
தூத்துக்குடியில் திருமணமான 9 நாட்களில் கார் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் திருமணமான 9 நாட்களில் கார் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
புதுமண தம்பதி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேம்படிமுத்து மகன் பலவேசம் (வயது 27). இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கால்செண்டரில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ரேவதி (25) என்பவருக்கும் கடந்த 10–ந் தேதி தூத்துக்குடியில் வைத்து திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் புதுமண தம்பதியினர் 2–வது மறு வீடு நிகழ்ச்சிக்காக தூத்துக்குடிக்கு வந்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் தூத்துக்குடி கடற்கரை பகுதிக்கு செல்ல முடிவு எடுத்தனர்.
அதன்படி நேற்று காலையில் பலவேசம், ரேவதி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டுக்கு சென்றனர். அங்கு சாலையோர பூங்கா அருகே நின்ற ஒரு காரின் பின்னால் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் அந்த பகுதியில் வைத்து புகைப்படக்காரர் மூலம் படங்களை எடுத்தனர்.
புகைப்படக்காரர் புதிய துறைமுகம் கடற்கரை பகுதிக்கு சென்று புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் புதுமண தம்பதியினர் அங்கு நின்று விட்டு, புதிய துறைமுகம் கடற்கரைக்கு செல்வதற்காக புறப்பட்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு முன்னால் நின்ற காரை கடந்து செல்ல முயன்றனர்.
கார் மோதி..
அப்போது தூத்துக்குடி கேம்ப்–1 பகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்பவர் தூத்துக்குடி நோக்கி காரில் வந்தார். ரித்தீஷ் தனக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நின்ற மற்றொரு கார் மீது வேகமாக மோதியது.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த புதுமண தம்பதிகள் மீதும், அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளியான தூத்துக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவர் மீதும் மோதியது. தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார் அருகில் இருந்த நடைமேடையின் மீது மோதி நின்றது.
புதுமாப்பிள்ளை பலி
இந்த சம்பவத்தில் பலவேசம், ரேவதி மற்றும் சிவக்குமார் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ரித்தீஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டாராம். போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த பலவேசம், ரேவதி, சிவக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலவேசம் பரிதாபமாக இறந்தார். ரேவதி, சிவக்குமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலவேசம் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். திருமணம் ஆகி 9 நாட்களில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.