தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 174 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Update: 2017-04-19 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 174 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசங்கர், பொருளாளர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கவுரவ தலைவர் சிவக்குமார், ஆலோசகர் தனசேகரன், சட்ட ஆலோசகர் ஆனந்த்கேபிரியேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். பொது மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்