நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

Update: 2017-04-19 21:00 GMT

நெல்லை,

நெல்லையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள்

‘பத்மஸ்ரீ‘ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 4–வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நெல்லை ‘தினத்தந்தி‘ அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி‘ ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில விவசாய அணி செயலாளர் சங்கரபாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் ராம்நாத், மாவட்ட பொதுச்செயலாளர் சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர் முரளிராஜா, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் தருவை காமராஜ், தாழையூத்து நகர தலைவர் மாணிக்கம், பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பத்தமடை காங்கிரஸ் தலைவர் மவுத்தாமலி, முகைதீன் அப்துல்காதர், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரசார் மாநில செயலாளர் எஸ்.டி.எஸ்.சார்லஸ் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜோதி, சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் நியமத்துல்லா, மாவட்ட தலைவி ஜெரீனா, வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை, எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் சண்முகராஜா, கோபால், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகத்தினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அந்தோணிதாஸ் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பகுதி செயலாளர்கள் விக்னேஷ், ஸ்ரீதர், வேல்முருகன், ஆறுமுகம், நிர்வாகிகள் மனோகர் ராஜ்குமார், பாலசுந்தர், பால்கண்ணன், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை தட்சணமாற நாடார் சங்க அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சங்க மேலாளர்கள் நடேசன், முருகேசன் மற்றும் மாரிமுத்து, மாரியப்பன், கண்ணன், ஜான்சி, ஆனந்தி, ஆனந்தகிருஷ்ணபெருமாள், சண்முகநாதன், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நற்பணி மன்றத்தினர்...

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் நேற்று கடைபிக்கப்பட்டது. இதையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு நெல்லை மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் யூனியன் தலைவர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா வெள்ளப்பாண்டி, முன்னாள் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் அருணாரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்