ஊசுடு முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கொலையில் முதல் மனைவி உள்பட 4 பேர் கைது
ஊசுடு முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கொலையில் முதல் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
வில்லியனூர்
ஊசுடு முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கொலையில் முதல் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் கிடைத்துள்ளது.
சரமாரி வெட்டிக் கொலைவில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் மாயவன்(வயது 43). ஊசுடு தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் வில்லியனூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.
கூடப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு காலிமனையில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மதுகுடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தண்ணீர் கேட்பது போல் நடித்து திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தி, அரிவாளை எடுத்து மாயவனை சரமாரியாக வெட்டித்தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். இதில் உடலில் பல இடங்களில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே மாயவன் துடிதுடித்து இறந்து போனா£ர்.
மனைவி உள்பட 4 பேர் கைதுஇதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயவனுக்கு விமல், பிரியா ஆகிய 2 மனைவிகள் இருப்பது தெரியவந்தது. இந்த கொலை குறித்து முதல் மனைவியான விமல் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது விமல் மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபால்தாஸ் தூண்டுதலின் பேரில் கல்மேடுபேட் பகுதியை சேர்ந்த சந்துரு, பெரம்பை சக்திவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாயவனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையொட்டி மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமையில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் கோபால்தாஸ், சந்துரு, சக்திவேல், விமல் ஆகியோர் பூத்துறை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விமல், கோபால்தாஸ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
வாக்குமூலம்மாயவனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாயவனின் முதல் மனைவி விமல் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
மாயவனுக்கும், எனக்கும் திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் அவர் கடந்த 2012–ம் ஆண்டு எனது சித்தி மகள் பிரியாவை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நான் அவருடன் கோபித்துக் கொண்டு காட்டுக்குப்பத்தில் உள்ள எனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டேன். அங்கு எனக்கும், கல்மேடுப்பேட்டை சேர்ந்த கோபால்தாஸ்(41) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. சமீபத்தில் நான் கூடப்பாக்கம் வந்து எனது கணவர் மாயவனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தேன்.
இந்தநிலையில் எனது சொத்தை, எனது மகன் பெயரில் எழுதி வைத்து விட்டதாகவும், அதற்கு பதில் காட்டுப்பத்தில் எனது பெயரில் உள்ள இடத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படியும் மாயவன் கூறினார். அதற்கு நான் மறுத்தேன்.
கள்ளத்தொடர்பை கண்டித்தார்மேலும் கோபால்தாசுடன் எனது கள்ளத்தொடர்பை என்னால் துண்டிக்க முடியவில்லை. இதனை தெரிந்த அவர் என்னை கண்டித்தார். மேலும் அவர் கோபால்தாசை கொலை செய்யவும் திட்டமிட்டார். இது தெரிந்த கோபால்தாஸ் என்னிடம் நான் மாயவனை கொலை செய்யப்போகிறேன் என்று கூறினார். நான் அவரிடம் எதுவானாலும் மாட்டிக்கொள்ளாமல் செய் என்று கூறினேன். எனவே கோபால்தாஸ் 2 ஆட்களை ஏவி மாயவனை கொலை செய்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த எங்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.