டாஸ்மாக் கடையை மூட கோரி பா.ஜனதாவினர் போராட்டம்
குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் 56 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று பா.ஜனதாவினர் மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நகர பா.ஜனதா சார்பில் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு நகர பா.ஜனதா தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
21 பேர் கைது
போராட்டக்காரர்கள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலையில் சிறிது நேரம் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து அப்பகுதியில் தடைபட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதில் ராஜன் உள்பட மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அஞ்சுகிராமம்
அஞ்சுகிராமத்தில் டாஸ்மாக் மதுகடைகளை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் அஞ்சுகிராமம் மண்டல தலைவர் ராஜலிங்கம் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தக்கலை
தக்கலையில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கேட்டு பத்மநாபபுரம் நகரம் மற்றும் தக்கலை ஒன்றிய பா.ஜனதா சார்பில் சம்பந்தப்பட்ட கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் தங்கப்பன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.