வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாய தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 3 நாள் காத்திருப்பு போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இரவு, பகலாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்த வேண்டும். ஆண்டு முழுவதும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.410 வழங்க வேண்டும்.
விரிவுபடுத்த வேண்டும்
தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் ஊதியத்தை தாமதம் இன்றி வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத்தொகைக்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள், வங்கி இல்லாத சிறுகடன் நிறுவனங்கள் மூலம் நிலமற்றோர் பெற்றுள்ள கடன்களை அரசு ஏற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருஞானம், துணை செயலாளர் முத்து.உத்திராபதி, நகர செயலாளர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், தலைவர் சேவையா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. மண்டல பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.