காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செகனா (வயது23). இவர் பெட்டவாய்த்தலையை சேர்ந்த மூர்த்தியை காதலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். செகனாவை அவரது தாய் வீட்டில் மூர்த்தி விட்டு விட்டு நேற்று முன்தினம் திருப்பூருக்
திருச்சி,
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செகனா (வயது23). இவர் பெட்டவாய்த்தலையை சேர்ந்த மூர்த்தியை காதலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். செகனாவை அவரது தாய் வீட்டில் மூர்த்தி விட்டு விட்டு நேற்று முன்தினம் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் செகனா வீட்டில் திடீரென விஷம் குடித்தார். மேலும் தான் விஷம் குடித்ததாக, தனது கணவர் மூர்த்திக்கு செல்போனில் தெரிவித்தார். இதையடுத்து அவர் திருப்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று காலை வந்தார். இதற்கிடையில் விஷம் குடித்ததை செகனா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் காலையில் மூர்த்தி வந்ததும் செகனாவை உடனடியாக சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று மாலை செகனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செகனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 7 வருடங்களுக்குள் செகனா தற்கொலை செய்ததால் திருச்சி உதவி கலெக்டர் கணேஷ்குமாரும் விசாரணை நடத்தி வருகின்றார்.