தாம்பரம் அருகே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் கைது

தாம்பரம் அருகே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-18 22:15 GMT

தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் ஜெயேந்திரர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை உடனடியாக அகற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கைது

அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதேபோல் பீர்க்கன்காரனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் பொற்றாமரை சங்கரன் தலைமையில் பெண்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரனை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

மேலும் செய்திகள்