சாமளாபுரத்தில் தடியடி சம்பவம்: போலீஸ் அதிகாரிகளிடம் மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை
சாமளாபுரத்தில் நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி நேற்று விசாரணை நடத்தினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியில் பொதுமக்கள் கடந்த 11-ந் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ்(வயது 40) என்பவருக்கு தலை உடைந்து காயம் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் அந்த பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து அனைத்துக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமியை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை
போலீசார் நடத்திய தடியடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சாமளாபுரத்துக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதன்தொடர்ச்சியாக தடியடி சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார். இதில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், தங்கவேலு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 7 போலீசார் ஆகியோரிடம் காலை முதல் மாலை வரை விசாரணை நடந்தது. தடியடி சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பல்லடத்தில்...
இன்று (புதன்கிழமை) பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கிறது. இதில் தடியடி சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடியடி சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளார். நேற்று காலை போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி சாமளாபுரம் வந்தார். தடியடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரி தாக்கியதில் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரியிடம் அவர் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து தடியடி சம்பவத்தில் தலை உடைந்து காயமடைந்த சிவகணேஷ் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணையை மேற்கொண்டார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
பின்னர் தடியடி நடந்தபோது அங்கிருந்த 15 பேரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள், போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் தங்களிடம் இருப்பதாக கூறினார்கள்.
மேலும் சம்பவ இடத்தில் சாலையோரம் உள்ள கடைகளில் பொருத்தியுள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸ் சூப்பிரண்டு பெற்று விசாரணை நடத்தினார். போலீஸ் மீது கல் வீசி தாக்கியதால் தான் தடியடி நடத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் இதை மறுத்தனர். தடியடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்த்த பிறகே சிலர் கோபத்தில் போலீசார் மீது கல் வீசியதாக அங்கிருந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்தார்கள்.
நாளை (வியாழக்கிழமை) கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் தடியடி சம்பவத்தின் போது இருந்தவர்களில் 35 பேரை மட்டும் அழைத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற உள்ளது. சம்பவத்தின்போது தாக்குதலுக்கு ஆளான தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளிட்டவர்களும் தங்கள் தரப்பு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று பொதுமக்கள் தங்கள் தரப்பில் உள்ள வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை முடிந்த பிறகு அடுத்த வாரம் அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி கூறினார்.