கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். மாதாந்திர மருத்துவ படியினை ரூ.1,000-மாக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் சடையாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வீரய்யா, மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரராஜூ நன்றி கூறினார்.