தூத்துக்குடியில், 22–ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் வருகிற 22–ந் தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக சங்கு கூடத்தில் நடக்கிறது.
எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் கொடுக்கலாம்.
கூட்டத்தில் நுகர்வோர்கள் பெயர் மாற்றம், புதிய சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.