பெண் டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ் கேமராவில் பதிவான கார் மூலம் விசாரணை
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த கும்பல் பயன்படுத்திய கார் கேமராவில் பதிவாகி உள்ளது.
நெல்லை,
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த கும்பல் பயன்படுத்திய கார் கேமராவில் பதிவாகி உள்ளது. அதைக்கொண்டு கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.30 ஆயிரம் அபேஸ்
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள டாக்டரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை 6 பேரும் வந்தனர். அவர்கள், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் வருமானவரி தொடர்பாக சோதனை நடத்துவதற்காக வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் வருமான வரி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு, ரூ.1 லட்சம் கேட்டனர். பின்னர் டாக்டரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டு வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டனர்.
கார் பதிவானது
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இதற்கிடையே டாக்டரின் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிற கார் ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து டாக்டர் வீடு நோக்கி திரும்பியது தெரியவந்தது. மேலும் இந்த கார் நெல்லை மாநகரில் அங்குமிங்கும் சுற்றிய போது, அந்தந்த பகுதியில் உள்ள கேமராக்களிலும் பதிவாகி உள்ளது.
இதையடுத்து கார் பதிவு எண் மூலம் போலீசார் துப்பு துலக்கி 6 பேர் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.