தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் 22–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 22–ந் தேதி பள்ளிக்கூட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடக்கிறது.

Update: 2017-04-18 20:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 22–ந் தேதி பள்ளிக்கூட மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடக்கிறது.

புத்தக தினம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் சார்பில், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது.

விழாவிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, கவிஞர் ஜவகர்லால், எழுத்தாளர் ஸ்ரீதரகணேசன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து புத்தக கண்காட்சி நடக்கிறது.

போட்டிகள்

புத்தக தினத்தையொட்டி வருகிற 22–ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.

10 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் மாவட்ட மைய நூலக உறுப்பினர், வாசகர்களுக்கு கவிதை போட்டி நடக்கிறது. அதேபோல், 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டியும், 9 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும், 6 முதல் 9–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ– மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

பதிவு

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்குள் தங்களின் பெயரை, தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 0461–2338977, 96008 77769 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட மைய நூலக அலுவலர் முனியப்பன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்