பெண்களிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள், தங்க நகைகள் பறிமுதல்

தமிழகம் மற்றும் புதுவையில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து

Update: 2017-04-17 22:42 GMT

புதுச்சேரி,

அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

நகைபறிப்பு

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் ரம்யா. மதடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13–ந் தேதி மதடிகப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரம்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

3 வாலிபர்கள் கைது

இதுதொடர்பாக துப்பு துலக்கியதில் கொம்பாக்கத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கிருபாநிதி (வயது 19) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது நண்பர்களான கொம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்(19), பிரபாகரன்(19) ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து திருபுவனை, வில்லியனூர் மற்றும் தமிழக பகுதியான கண்டமங்கலத்திலும் பெண்களிடம் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

மேலும் செய்திகள்