மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-04-17 22:45 GMT

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளுத்துவான்சேரி, தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மலர்(24).

தேனியில் உள்ள ரகுநாதனின் தாய்க்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், அவர் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தேனிக்கு சென்று விட்டார்.

15 பவுன் திருட்டு

நேற்று காலை அவரது வீட்டு கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ரகுநாதனுக்கும், மாங்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேனியில் இருந்து ரகுநாதனும் அவசரமாக தனது வீட்டுக்கு வந்தார். அப்போது யாரோ மர்மநபர்கள், வீட்டின் இரும்பு மற்றும் மரக்கதவுகளில் இருந்த பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்