டாஸ்மாக் கடையை எதிர்த்து பேராசிரியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அழகியமண்டபம்,
சுங்கான்கடையில் இருந்து ஆளூர் செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்காக அந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுங்கான்கடையில் தொழில்நுட்ப கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி போன்றவை உள்ளன. எனவே, அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், சுங்கான்கடையில் டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து பொதுமக்களும், கல்லூரி பேராசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல கல்லூரிகள் உள்ள சுங்கான்கடை பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கடை அமைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.