திருவிடைமருதூரில் நடந்த நிகழ்ச்சியில் 412 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

திருவிடைமருதூரில் நடந்த நிகழ்ச்சியில் 412 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் எம்.பி. வழங்கினார்

Update: 2017-04-17 22:30 GMT
திருவிடைமருதூர்,

தமிழக அரசின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் திருவிடைமருதூரில் 412 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கினார். இதில் ஒன்றிய ஆணையர்கள் குமார், உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்