ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வான 37 பேருக்கு பணிஆணை அதிகாரி வழங்கினார்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வான 37 பேருக்கு பணிஆணை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கினார்

Update: 2017-04-17 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் 9.4.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த 40 நபர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி அம்பிகாவதி ஆகியோர் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 37 பேர் கலந்துகொண்டனர். 3 நபர்கள் கலந்தாய்வில் பங்குபெறவில்லை. இந்த 37 பேரும் கலந்தாய்வின் மூலம் தங்களுக்குரிய பணியிடத்தை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை பெரம்பலூர் முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி வழங்கினார். 

மேலும் செய்திகள்