பெத்தநாயக்கன்பாளையத்தில் தாலுகா அலுவலகம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

பெத்தநாயக்கன்பாளையத்தில் தாலுகா அலுவலகம் கட்டக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-17 23:15 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

பெத்தநாயக்கன்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

புதிதாக தாலுகா அலுவலகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பொதுமக்கள் போராட்டம்

எனவே பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே புதிதாக கட்டிடம் கட்டக் கோரி நேற்று பெத்தநாயக்கன்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.பழனிமுத்து தலைமை தாங்கினார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் சபியுன்னிஷா அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்