தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நங்கவள்ளி அருகே உள்ள நரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது22). லாரி டிரைவர்.

Update: 2017-04-17 23:00 GMT

தாரமங்கலம்,

நங்கவள்ளி அருகே உள்ள நரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது22). லாரி டிரைவர். பனங்காடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் கிருத்திகா (19). இவர் தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி கிருத்திகா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் குமாரும், கிருத்திகாவும் தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் கடந்த வாரம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி சமரசம் செய்து காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்