விஞ்ஞான துளிகள்
ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இந்தியர்களின் மனநிலை பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
புதிய போன்களை விரும்பும் இந்தியர்கள்: ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இந்தியர்களின் மனநிலை பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் மூன்றில் 2 பங்கு இந்தியர்கள், இன்னும் ஓராண்டிற்குள் நவீன போன்களுக்கு மாறப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட, அதிக சேமிப்பு– நினைவுத்திறனும், சிறந்த பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘‘இந்தியர்கள், சராசரியாக 30 மாதங்களுக்கு ஒரு தடவை தங்கள் ஸ்மார்ட்போனை அப்போதைய நவீன மாடலுக்கு மாற்றிக் கொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும்’’ அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் என்ற அமைப்பு இந்த கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டு உள்ளது.
புதுமைபெறும் கூகுள் எர்த் : தேடுபொறி உலகின் ஜாம்பவானாக விளங்கும் கூகுள், வழங்கும் சேவைகளில் ஒன்று கூகுள் எர்த். பூமி பற்றிய அற்புத தகவல்கள், வீடியோக்கள் போன்ற சேவைகளை இந்தப் பக்கத்தில் பெற முடியும். நாளை (ஏப்ரல் 18) முதல் இந்த சேவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 22–ல் புவி தினம் வர இருப்பதையொட்டி இதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுவதாகவும், வேறுசில அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்திலான காட்சிகளை இனி கூகுள் எர்த் பக்கத்தில் பார்க்க முடியும் என்றும், இதற்கான பிரத்தியேக ஹெட்செட் கருவியும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
நீரிழிவு சிகிச்சையில் ஆப்பிள் நிறுவனம்: உலகையே அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய்க்கு தீர்வு தரும் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்பது அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவாக இருந்தது. அவரது கனவை நனவாக்கும் பொருட்டு தற்போது ஆப்பிள் நிறுவனம் உயிரிமருத்துவ பொறியாளர்கள் குழு ஒன்றை ஒருங்கிணைத்து உள்ளது. இந்தக் குழு நீரிழிவு நோயை கண்காணித்து சிகிச்சைக்கு உதவும் சென்சார் மற்றும் அப்ளிகேசனை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே நீரிழிவை இனம்காணும் கருவியாக இது இருக்கும். கூகுள் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் உயிர் எலக்ட்ரானிக் மருத்துவ கருவிகளை உருவாக்கும் செயல்த்திட்டத்தில் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டி.என்.ஏ. மூலம் இடப்பெயர்ச்சி ரகசியம்: இதுவரை மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பின்தொடர்வது மிகச் சவாலான காரியமாக உள்ளது. ஆமைகள், கடற்சிங்கங்கள் போன்ற பெரிய உயிரினங்களில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி அவை இருக்குமிடம் மற்றும் நகருமிடம், வாழ்க்கைச் சூழலை அறிய முடியும். ஆனால் சின்னஞ்சிறு மீன்களை இவ்வாறு பின் தொடர்வது சாத்தியமில்லை. தற்போது புது யுத்தியாக மீன்களின் டி.என்.ஏ.க்களை வைத்து அவற்றின் இடப்பெயர்ச்சியை அறிய முடியும் என்று நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மீன்கள் இடப்பெயர்ச்சி செய்யும்போது ஏராளமான டி.என்.எ.க்களை தண்ணீரில் விட்டுச் செல்வதாகவும், அதன் மூலம் மீன்களின் இடப்பெயர்ச்சியை அறியலாம் என்றும் கூறுகிறார்கள். பல இடங்களில் 6 மாத காலங்களுக்கு லிட்டர் கணக்கில் தண்ணீர் மாதிரிகளை எடுத்த ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. முதல் முறையாக ஸ்பிரிங் பிஷ் எனப்படும் மின்களின் இடப்பெயர்ச்சியை துல்லியமாக பதிந்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் 48 வகை புதிய மீன்களின் டி.என்.ஏ.க்களும் ஆய்வில் அறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.