தானியங்கி புல்வெட்டும் ரோபோ

தானியங்கி சென்சார் மூலம் தடைகள், தாவரங்களை அறிந்து கொண்டு புற்களை ஒழுங்குபடுத்துகிறது இந்த சாதனம்.

Update: 2017-04-17 09:20 GMT
தோட்டங்கள், பண்ணைகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் வளரும் புற்களை எளிதில் கத்தரித்து அழகூட்ட எந்திர கருவிகள் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளன. தற்போது அமெரிக்காவில் தானியங்கி முறையில் புற்களை கத்தரித்து அழகுபடுத்தும் ரோபோ சாதனம் அறிமுகமாகி உள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்த ரோபோ புல்அறுக்கும் கருவியை தயாரித்துள்ளது. இதன் பெயர் மீமோ. ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தைச் சுற்றிலும் மற்றும் தாவர மேடைகள், மரங்கள் உள்ள எல்லையில் வயர்கள் பதித்தால் அந்தப் பகுதியை விட்டுவிட்டு மற்ற இடங்களில் புற்களை கத்தரிக்கும் வேலையை செய்தது இந்த ரோபோ. தற்போது மேலும் நவீனப்படுத்தப்பட்டு தானியங்கி சென்சார் மூலம் தடைகள், தாவரங்களை அறிந்து கொண்டு புற்களை ஒழுங்குபடுத்துகிறது இந்த சாதனம்.

எவ்வளவு நிலப்பரப்பை கையாள வேண்டுமோ அதற்கேற்ற சக்தியில் 2 விதமான கருவிகள் விற்பனைக்கு விடப்பட்டள்ளன. விலை 2500 அமெரிக்க டாலர் முதல் விற்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்