குடல் பாதிப்புகளை அறிய பாக்டீரியாக்களை பயன்படுத்தலாம்!

அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈகோலி பாக்டீரியாக்களில் பொறியியல் நுட்பப்படி சில மரபணு மாற்றங்கள் செய்துள்ளனர்.

Update: 2017-04-17 09:14 GMT
பாக்டீரியாக்கள் பெரும்பாலும் தீமை செய்வதால் அவற்றை கிருமிகளாகவே நாம் பார்த்துப் பழகிவிட்டோம். விஞ்ஞானம், பாக்டீரியாக்களில் சில மாற்றங்களை புகுத்தி அவற்றை நன்மை செய்யும் வகையில் பழக்கப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈகோலி பாக்டீரியாக்களில் பொறியியல் நுட்பப்படி சில மரபணு மாற்றங்கள் செய்துள்ளனர். இது குடலில் ஏற்படும் அழற்சி, எரிச்சல், ஜீரணக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. ஒருவிதமான கழிவை வெளியேற்றி இதன் அறிகுறிகளை நமக்கு அறிவிக்கும். அதாவது எலிகளானது நீல நிறத்தில் கழிவை வெளியேற்றினால் குடல் பாதிப்புகள் சிகிச்சை அளிக்கும் வகையில் மோசமடைந்திருப்பதாக கருதலாம்.

‘‘குடல்களில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளே நமது ஆரோக்கியத்திற்கும், நோய்களுக்கும் பெரிதும் காரணமாகின்றன. மரபணு மாற்றம் செய்த பாக்டீரியாக்களை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் குடல் பகுதியில் நிகழும் செரிமானம் முதல் நோய்கள் வரை அனைத்தையும் கண்காணிக்கவும், சிகிச்சை அளிக்கவும் முடியும்’’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் செய்திகள்