எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 396 வேலை வாய்ப்புகள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 396 பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS), என்று அழைக்கப்படுகிறது. தற்போது எய்ம்ஸ் மையத்தின் பல்வேறு கிளைகளிலும் கற்பித்தல் பணியிடங்கள் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் சீனியர் ரெசிடென்ட்/ சீனியர் டெமான்ஸ்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 322 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
போட்டித் தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அனஸ்தியாலஜி, கிரிட்டிகல் அன்ட் இன்டென்சிவ் கேர், பாலியேடிவ் மெடிசின், கார்டியாக் அனஸ்தியாலஜி, கைனகாலஜி, ஆப்தமாலஜி, ரேடியோடயக்னாசிஸ், கார்டியாக் ரேடியாலஜி, நியூரோ ரேடியாலஜி, ரேடியோ தெரபி, மெடிசின், எமெர்ஜென்சி மெடிசின், ரெமடாலஜி, கார்டியாலஜி, நியூரோ சர்ஜரி, ஆர்தோபெடிக்ஸ், டென்டல், சைகியாட்ரி, நியூக்ளியர் மெடிசின் உள்ளிட்ட 51 விதமான பிரிவுகளில் பணிகள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு:–
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 31–7–2017 தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
முதுநிலை மருத்துவ படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., டி.என்.பி. மற்றும் அதன் கிளைப்பிரிவு படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
தேர்வு செய்யும் முறை:
தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000–மும், மற்றவர்கள் ரூ.800–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27–4–2017–ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 4–6–2017–ந் தேதி அன்று தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் தேர்வு நடத்தப்படுகிறது.
ரிசர்ச் அசோசியேட் பணி
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி டெல்லி எய்ம்ஸ் கிளையில் ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தேவையான எண்ணிக்கையில், தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோகெமிஸ்ட்ரி, லைப் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் பி.எச்.டி. படித்தவர்கள் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் சுய விவரப் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் 24–4–2017–ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsexams.org என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
ஜோத்பூர் 74 பணிகள்:
மற்றொரு அறிவிப்பின்படி ஜோத்பூர் எய்ம்ஸ் கிளையில் கற்பித்தல் சாராத பணிகளுக்கு 74 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இளநிலை இந்திய மொழி பெயர்ப்பாளர், முதுநிலை இந்தி அதிகாரி, மேனேஜர், டயடீசியன், சானிடரி இன்ஸ்பெக்டர், லைபிரரியன் போன்ற பணியிடங்கள் உள்ளன.
40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பிரிவு பணிகளுக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். இந்தி–ஆங்கிலம் மொழி பெயர்ப்பு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்கள், எம்.எஸ்சி. கிளினிகல் நியூட்ரீசியன், டயட்டிடிக்ஸ், புட்சயின்ஸ், சோசியல் ஒர்க் உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்களுக்கு பணி உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8–5–2017–ந் தேதியாகும். முழுமையான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.