மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. தென்னகத்து துவாரகை என பக்தர்கள் இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக நேற்றுமுன் தினம் இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தெப்பம்
இதையொட்டி கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிருஷ்ண தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ராஜகோபாலசாமி கோவிலை சுற்றிலும் உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.