ஈஸ்டர் திருவிழாவையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் திருவிழாவையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சூசை, சதீஷ்ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மைக்கேல்பட்டி
இதேபோல் மைக்கேல்பட்டி, பூதலூர், முத்தாண்டிப்பட்டி, மேகளத்தூர், கோட்டரப்பட்டி உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.