பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கும்பகோணம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-04-16 22:15 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆர்.வி.நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி கலைவாணி (வயது 27). இவர், தனது மாமியார் மீனாட்சி யுடன் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஆர்.வி.நகர் பூங்கா அருகே வரும்போது மோட்டார் சைக்கிளுடன் மர்ம நபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதையோ விசாரிக்க வருவதுபோல் கலைவாணி அருகே வந்து நின்றனர். பின்னர் அவர்கள் திடீரென கலைவாணி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகாரின்பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்