தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது
தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்களது பெயர், ஊர் மற்றும் வட்டாரம் குறித்த தகவலை 21-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களையும் கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னரே வழங்க வேண்டும். கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.