நெடுவாசலில் பசுமாடுகளிடம் மனு கொடுத்து போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பசுமாடுகளிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
வடகாடு,
ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயுதிட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள், மாணவ-மாணவிகள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர், மத்திய மந்திரி, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கு மார்ச் 27-ந் தேதி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டு அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, மார்ச் 31-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் நெடுவாசல், அதைச்சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 கிராமமக்கள்
இதைத்தொடர்ந்து, நெடுவாசல் நாடியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவது, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், நெடுவாசலைச்சுற்றியுள்ள சுமார் 70 கிராம மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மத்தி அரசை கண்டித்து கோஷம்
இந்நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ந் தேதி அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். அந்த போராட்டம் 5-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, திட்டத்தை ரத்து செய்ய வேண்டியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் போட்டனர்.
பசுமாடுகளிடம் மனு
இதைத்தொடர்ந்து, திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, விவசாயிகளின் வீடுகளில் உள்ள பசுமாடுகளை பிடித்து வந்து நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பசுமாடுகளிடம் மனு அளித்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, எங்கள் வாழ்வாதாரமே விவசாயம் தான். அதை அழிக்கும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் முதலில் திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய மந்திரியும், தமிழக அரசு திட்டத்துக்கு அனுமதி வழங்காது என மாநில மந்திரியும் உறுதியளித்தனர். ஆனால், எங்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் இப்போது, திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அதனால், எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பசுமாடுகளிடம் கோரிக்கை மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.