திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அவரைக்காய் கிலோ ரூ.80–க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டத்தில், 2–வது பெரிய மார்க்கெட்டாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் விளங்கி வருகிறது.

Update: 2017-04-16 19:32 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில், 2–வது பெரிய மார்க்கெட்டாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 200 முதல் 300 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்தினை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் அவரைக்காய் கிலோ ரு.70 முதல் ரூ.80 வரையில் நேற்று விற்பனை ஆனது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது, பொதுவாக கோடை மழை, காற்றால் முருங்கைக்காய், தக்காளி இவற்றின் வரத்து பாதிக்கும். ஆனால் இந்த வருடம் கோடை மழை பொய்த்து போனதால் இவற்றின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் இவை இரண்டும் விலை குறைந்துள்ளது. இதுதவிர மற்ற காய்கறிகளின் வரத்து குறைந்து போனதால் விலை அதிகரித்துள்ளது, என்று தெரிவித்தார்.

மார்க்கெட்டில், பட்டர் பீன்ஸ் கிலோ ரூ.100, கேரட், பீன்ஸ் தலா கிலோ ரூ.70, கத்தரிக்காய் ரூ.50, பாகற்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவை ரூ.40 முதல் ரூ.45 வரையிலும், சவ்சவ் ரூ.30, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முருங்கைக்காய், ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் நேற்று விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்