கர்நாடகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில் பல்லாரி, பெலகாவி உள்பட 12 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது
கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்லாரி, பெலகாவி உள்பட 12 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பெங்களூரு,

பூங்கா நகரமான பெங்களூருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்போதும் மிதமான சீதோஷ்ணநிலை நிலவியது.
பெங்களூரு வருவோரின் எண்ணிக்கை
இங்கு அடர்த்தியான மரங்கள் இருப்பதால், கோடை காலத்திலும் குளிர்காற்று மேனியில் படுவதை அனுபவிக்கும் நிலை இருந்தது. இதனாலேயே பெங்களூரு குளுகுளு நகரம் என்ற பெயரை பெற்றது. இந்த மிதமான சீதோஷ்ணநிலை காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பெங்களூருவில் குடியேறுவது அதிகரித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ளன.
வேலை தேடி பெங்களூரு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூருவில் மக்கள்தொகை 1 கோடியை தொட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கையும் 67 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கம் போன்றவற்றால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் வாகன நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
மெட்ரோ ரெயில் திட்டம்
இந்த வாகன நெரிசலுக்கு தீர்வு காண மாநில அரசு பல்வேறு சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பாலங்களை கட்டுதல், சுரங்க பாலங்களை அமைத்தல், நீளமான பாலங்களை நிறுவுதல், மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. என்றாலும் நகரில் வாகன நெரிசல் தீர்ந்தபாடில்லை.
இந்த சாலை மேம்பாட்டு பணிகள், மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக நகரில் பல்வேறு இடங்களில் மரங்கள் வெட்டப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மரங்களை வெட்டுவது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இவற்றின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவின் வழக்கமான சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதை இங்கு வசிக்கும் மக்களால் மிக தெளிவாகவே உணரப்படுகிறது.
மழை அளவும் குறைந்துவிட்டது
மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நகரில் மழை அளவும் குறைந்துவிட்டது. வழக்கமான சீதோஷ்ணநிலையும் மாறிவிட்டது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது மார்ச் மாதத்தின் மத்தியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிடுகிறது. எப்போதும் சென்னையில் தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயில் தாக்கத்தில் சென்னையை பெங்களூரு மிஞ்சிவிட்டது.
பூங்கா நகரம் மெல்ல மெல்ல அதன் தனித்தன்மையை இழந்து வருகிறது. இது இங்கு வசிக்கும் மக்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து வெயில் தொடங்கி கொளுத்தி வருகிறது.
பெங்களூருவில் வெப்பநிலை 100 டிகிரியை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமான வெயிலுடன் வாகனங்களில் இருந்து வெளிவரும் சூடான கரும்புகையும் சேருவதால் வெயில் சூட்டின் தாக்கம் அதிகமாவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
வெயில் சூட்டில் ‘ஆம்லெட்‘
பெங்களூரு தவிர பிற மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி, விஜயாப்புரா, சிவமொக்கா, கதக், சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.
பெங்களூருவில் சுட்டெரிக்கும் வெயில் சூட்டில், பன்னரகட்டா பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் தவாவை வைத்து முட்டையை உடைத்து ஊற்றியுள்ளார். வெயில் சூட்டில் முட்டை ‘ஆம்லெட்‘டாக உருவானதாக அவர் தெரிவித்தார்.
12 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில்
நேற்று பெலகாவி, விஜயாப்புரா, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், கதக், தார்வார், பல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, சிக்பள்ளாப்பூர் (சிந்தாமணி), சிவமொக்கா ஆகிய 12 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. பெங்களூருவிலும் நேற்று பகல் 3 மணி வரை வெயில் வாட்டி வதைத்தது. அதன் பின்னர் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கொளுத்தும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலைகளில் பகல் நேரங்களில் குடைகள் பிடித்த பிடி பொதுமக்கள் செல்வதை காண முடிகிறது.
குளிர்பானங்கள் விற்பனை
மேலும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடிச் சென்று வருகிறார்கள். இதனால் அதன் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த இளநீர் ஒன்று தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிகளவில் இளநீரை வாங்கி பருகுவதே காரணம் என்று இளநீர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். அதேப் போல் தர்ப்பூசணி, பழ ஜூஸ் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது.