திருவண்ணாமலை அருகே எரிந்த நிலையில் பெண் பிணம் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
திருவண்ணாமலை அருகே எரிந்த நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டது.
வாணாபுரம்,
திருவண்ணாமலை அருகேயுள்ள சின்னககல்லபபாடி காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இதனை அப்பகுதிக்கு ஆடுகள் மேய்கக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கற்பழித்து கொலையா?போலீஸ் விசாரணையில், எரிந்த நிலையில் கிடந்த பெண் சின்னக்கல்லப்பாடியை சேர்ந்த சகாதேவன் என்பவரின் மனைவி தவமணி (38) என்பது தெரிய வந்தது. சகாதேவன் கடந்த சில ஆண்டுகளுககு முன் இறந்து போனார். அதைத்தொடர்ந்து தவமணி சற்று மனநிலை பாதிககப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இந்த நிலையில் சின்னக்கல்லப்பாடி காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் தவமணி பிணம் கண்டுபிடிக்ப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தவமணி காட்டுப்பகுதிக்கு சென்று மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தவமணி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்து விட்டு மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.