அரசியல் சுட்டுவிட்டதால் அமைதிக்கு ஏங்கும் உருக்குப் பெண்
‘இந்தியாவின் மனித உரிமைப் போராளியாக’ வர்ணிக்கப்படுபவர், இரோம் சர்மிளா.
‘இந்தியாவின் மனித உரிமைப் போராளியாக’ வர்ணிக்கப்படுபவர், இரோம் சர்மிளா. மணிப்பூரில் அமலில் இருக்கும் விசேஷ ராணுவ சட்டம் அங்குள்ள மக்களின் உரிமைகளை நசுக்குவதாகக்கூறி, 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர். போராட்டத்தை முடித்துவிட்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவருக்கு கிடைத்தது 90 ஓட்டுகள் மட்டுமே! அதனால் அரசியலுக்கும் விடைகொடுத்துவிட்டார். அவரிடம் சில கேள்விகள்:
உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் போராட்டத்திலேயே கடந்து போய்விட்டதல்லவா?
(இதற்கு பதிலளிக்க விரும்பாதவர் போன்று சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்) நான் இப்போது மனித மனதில் அளவில்லாமல் இருக்கும் அனுதாபத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
மற்ற பெண்களைப் போன்று சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டீர்களா?
நான் இந்த வாழ்க்கையை நேசிக்கிறேன். விவேகமான, மதிப்பு நிறைந்த வாழ்க்கை வாழ நான் விரும்பு கிறேன். கறுப்புச்சட்டம் அமலில் இருக்கும் மணிப் பூரில் அது கிடைக்கவில்லை. அதனால் ராணுவச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்தினேன்.
இந்திய பெண்களைப் பற்றி என்னிடம் கருத்து கேட்கிறார்கள். நான் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறேன். நான் ஒரு பெண்உரிமைவாதியும் இல்லை. பெண்உரிமைவாதி என்ற அடையாளமும் எனக்கு தேவையில்லை. நான் ஒரு சாதாரண மனிதன். அதனால்தான் எனது சிந்தனைகளை மற்ற சாதாரண மனிதர்களோடு பங்கிட முடிகிறது. நான் நானாகவே வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறேன்.
நீங்கள் கவிதை எழுதுவீர்கள் அல்லவா?
நான் முன்பு கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆழமான சிந்தனைகளை எழுதவே நான் ஆசைப்படுகிறேன்.
இதுவரை இருந்த உங்கள் கொள்கைகளில் இனி ஏதேனும் மாற்றம் வருமா?
எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது வாழ்க்கையின் இன்னொரு கட்டத்தை நான் அடைந்திருக்கிறேன்.
உங்கள் அம்மா மற்றும் குடும்பத்தை பற்றி?
அம்மாவுக்கு வயதாகிவிட்டது. இப்போது 90 வயதைத்தொடும் அவர் தனது 44-ம் வயதில் என்னை பெற்றெடுத்தார். நானும் 44 வருடங்கள் வாழ்ந் திருக்கிறேன். நான் வெளி மாநிலங்கள் செல்லும்போதெல்லாம் அம்மாவிடம் இருந்து ஆசி பெறுகிறேன்.
கடந்துபோன காலங்களை நினைத்துப்பார்க்கிறீர்களா?
கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும். கறுப்புச் சட்டத்தை பின்வாங்கவே நான் 16 ஆண்டுகள் போராடினேன். 2000-ம் ஆண்டில் மாலோமின் பகுதியில் நான் போராட்டத்தை தொடங்கியபோது ஆயிரக்கணக்கான மக்கள் என்னை பார்க்க வந்தார்கள். அதை ஒரு தெரு நாடகம் போன்று.. நான் அந்த போராட்டத்தில் ஜெயிக்க விரும்பினேன். கடைசியில் என்னோடு நிற்க வேண்டியவர்கள் கைகழுவிவிட்டார்கள். ஜனநாயக நாட்டில்தான் மக்களை அடிமைப்படுத்தும் கடுமையான சட்டங்கள் உள்ளன. 2004-ல் காம்ங்ளாவில் இருந்து அந்த கறுப்பு சட்டம் வாபஸ் ஆக என் போராட்டம்தான் காரணம். என்னை உருக்குப் பெண் என்று அழைக் கிறார்கள். ஆனால் நான் காயம்பட்டவள். மக்கள் எப்போதும் எனக்கு துணைநிற்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் மரணம் வரை போராடுவேன் என்று அவர்கள் நினைத்து விட்டார்கள் போல் தெரிகிறது. நான் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
டெல்லி நீதிமன்றத்தில் இருந்து நான் வெளியே வந்த உடன் என் மூக்கில் மாட்டப்பட்டிருந்த குழாயை கழற்றி நான் குப்பைகூடையில் போட்டேன். எனக்கு என் கர்மத்தை பூர்த்தியாக்கவேண்டும் என்று தோன்றியது. புதிய போராட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தேன் நான். அரசியல் அழுக்கு நிறைந்த சாக்கடை என்றாலும் அதை சுத்தப்படுத்தவும் ஆட்கள் தேவையல்லவா என்று நான் நினைத்தேன். ஆனால் அநீதிகளுக்கு இடையேயான போட்டியை நான் தேர்தலில் கண்டேன். பணமும், அதிகாரமும்தான் தேர்தலில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் அரசியல் எனக்கு ஏற்றதல்ல. இனி எந்த தேர்தலிலும் நான் போட்டி யிடமாட்டேன். சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் காரியங்களை நான் செய்யவேண்டும். மணிப்பூர் மக்கள் என்னை நம்பவில்லை. அதுதான் இப்போதைய பிரச்சினை.
அரசியல் தோல்வியை தொடர்ந்து இரோம் சர்மிளா இப்போது அமைதியை தேடிக்கொண்டிருக்கிறார்.