வாருங்கள் குழந்தைகளே வாழ்ந்து காட்டலாம்
புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இந்த டாக்டரை பார்த்ததும் புத்துணர்ச்சியடைந்து விடுகின்றன.
புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இந்த டாக்டரை பார்த்ததும் புத்துணர்ச்சியடைந்து விடுகின்றன. அவரது கைகளை பற்றிக் கொண்டு பாசத்தோடு நெருங்குகின்றன. அவரும் பரிவோடு அவைகளின் தலையை வருடிவிட்டு, “சாப்பிட்டியா? உனக்கு வேறு ஏதேனும் வேணுமா?” என்று கேட்கிறார். அந்த குழந்தைகள் அதுவேண்டும்.. இது வேண்டும் என்று எதையும் கேட்காமல், ரொம்ப பக்குவப்பட்டவர்களைப்போன்று, அந்த டாக்டரின் முகத்தைப் பார்த்து ‘எங்களுக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது’ என்பதுபோல் நிறைவாக சிரிக் கிறார்கள். அவர்கள் ‘லுக்கிமியா’ என்ற ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைகள்.
சிறிது நேரம் உரையாடிவிட்டு புன்னகையோடு அவர்களிடமிருந்து விடைபெறும் டாக்டர், “கோவிலுக்கு போய் கடவுளை பார்க்கும்போது நமக்கு கிடைக்கும் நிம்மதி இந்த குழந்தைகளின் கண்களை பார்க்கும்போது கிடைக்கும். இவர்கள்தான் உலகின் நிஜமான போராளிகள். எவ்வளவோ வலி, வேதனை..! அத்தனையையும் தாங்களே தாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் அம்மாவிடம், ‘எனக்கு எந்த வலியும் இல்லேம்மா.. நீ அழாதேம்மா’ என்பார்கள். அவ்வளவு மனபலத்தை கடவுள் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். நாம் இந்த குழந்தைகளுக்கு கருணையோடு உதவினால், நாம் எந்த கடவுளை வணங்குகிறோமோ அந்த கடவுளை அவர்களது கண்களில் காணலாம்” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார், அவர்.
அந்த டாக்டரின் பெயர் பிரியா ராமச்சந்திரன். வயது 49. இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நோய் தீரும் வரை இலவசமாக உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகளை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சைல்டு டிரஸ்ட்’ மருத்துவமனையில் வழங்கிவருகிறார். இந்த சேவைக்காக அவர், கடந்த 15 ஆண்டுகளாக ‘ரே ஆப் லைட் பவுண்ட்டேஷன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இவர், இந்த சேவை உணர்வை தனது பெற்றோரிடம் இருந்து பெற்றிருக் கிறார். பெற்றோர்: டாக்டர் எம்.எஸ்.ராமகிருஷ்ணன்- டாக்டர் மாதங்கி ராம கிருஷ்ணன். அவர்களது ஒரே மகள் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.
“என் தந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஓய்வுக்காலம் வரை சேவை செய்தவர். அவர்தான் பின்பு சைல்டு டிரஸ்ட் மருத்துவமனையை உருவாக்கினார். என் தாயார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை தொடங்கி, அங்கேயே பணியாற்றியவர். என் தாயார் தீக்காயத்திற்கான சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய சில பெண்களை, அவர்களது உடல் பகுதி பார்க்க கோரமாக இருப்பதாக கருதி ஒருசில பெற்றோர் அழைத்துச்செல்ல மாட்டார்கள். அந்த பெற்றோருக்கு மனநல ஆலோசனை வழங்கி, அவர்களது மனம் மகளை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் வரை, அவர்களை என் அம்மா எங்கள் வீட்டிலே என்னோடு தங்கவைத்து பராமரிப்பார்.
எனது பாட்டி லட்சுமி பி. நாயர் மனவளர்ச்சி குன்றியோருக்கு சேவை செய்யும் பிரபலமான அமைப்பு ஒன்றில் செயலாளராக இருந்தார். அங்கு 18 வயதுவரை உள்ளவர்களைத்தான் பராமரிப்பார்கள். நேபாள இளைஞருக்கு 18 வயது ஆன பின்பும் அவரது பெற்றோர் வந்து அவரை அழைத்துச்செல்லவில்லை. அதனால் அவரை பாட்டி எங்கள் வீட்டில் வைத்து பராமரித்தார். அவர் எனக்கு அண்ணனாக எங்கள் வீட்டில் வளர்ந்து வந்தார். அவர்களோடு நானும் கருணையுடன் வளர்ந்தேன். கூடவே டாக்டர் படிப்பு மீது பற்றும் வந்து விட்டது. பெற்றோரும், ‘டாக்டருக்கு படி’ என்று சொன்னதும், அதை அதிர்ஷ்டமாக கருதி ஏற்றுக் கொண்டேன்” என்கிறார்.
இவர் டாக்டர் படிப்பை, தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொல்ல காரண மிருக்கிறது!
“ஒருவருடைய வலியை தீர்க்கும் சக்தி கடவுளுக்கும், அவருக்கு அடுத்து டாக்டருக்கும்தான் உண்டு. அதனால் டாக்டர் படிப்பு என்பது ஒரு ‘மனிதாபிமான விஞ்ஞானம்’. தன்னை தேடி வந்திருக்கும் நோயாளியை பார்த்து உருகும் மனம் டாக்டருக்கு இருக்கவேண்டும். அப்படி உருகினால்தான் அவர், அந்த நோயாளிக்கு செய்யும் சிகிச்சையில் கருணை கலந்திருக்கும். அந்த மருத்துவம்தான் சிறந்தது. என் முன்னால் இருக்கும் குழந்தையை என் குழந்தையாக நினைத்துதான் நான் சிகிச்சைதருவேன். மருத்துவம் படிக்க விரும்பு கிறவர்களுக்கு மனிதாபிமானம் அதிகம் இருக்கவேண்டும். இல்லாதவர் களிடம் மருத்துவ படிப்பை திணிக்கக்கூடாது. நான் மருத்துவம் படிக்கவேண்டும் என்று நானும் விரும்பினேன். என் பெற்றோரும் விரும்பினார்கள். அதனால்தான் அதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்கிறேன்”
இவர் சிறந்த மாணவி என்ற தகுதியுடன் பள்ளிப் படிப்பை பூர்த்திசெய்துவிட்டு, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்திருக்கிறார். அங்கு மருத்துவப் படிப்பில் 19 தங்கப்பதக்கங்களை பெற்றிருக்கிறார். பின்பு இங்கிலாந்தில் ‘எப்.ஆர்.சி.எஸ்’ படிக்க சேர்ந்திருக்கிறார். முதலில் இவர் மூளை தொடர்புடைய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் ‘நியூரோ சர்ஜன்’ துறையை தேர்ந்தெடுத்து படிக்கவே திட்டமிட்டிருந்திருக்கிறார். அப்போது தந்தை எதிர்பாராமல் மரணமடைய, அவரது இறுதிக்காரியங்கள் நடந்த இடத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் இவரை குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுத்து படிக்கச் செய்திருக்கிறது.
“நான் லண்டனில் மருத்துவ மேற்படிப்பை தொடர்ந்துகொண்டிருந்தபோது சென்னையில் என் தந்தை காலமானார். நான் ஒரே பெண். ‘என் தந்தை என்னை பெண்ணாக நினைக்கவில்லை. ஆணாக நினைத்து வளர்த்து, வெளிநாட்டிற்கும் படிக்க அனுப்பிவைத்தார். அதனால் நானே கொள்ளிப்போடுவேன்’ என்றேன். அதற்காக நான் சுடுகாட்டிற்கு சென்றபோது எதிர்பாராத அளவில் ஏராளமான ஏழைப்பெண்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ‘எங்கள் குழந்தைகளை காப்பாற்றிய தெய்வமே செத்துப்போயிட்டீங்களே..’ என்று கதறி அழுதார்கள். அரசு மருத்துவமனையில் பணியாற்றிய என் தந்தை குழந்தைகள் மீது வைத்திருந்த பாசத்தை அப்போது நான் உணர்ந்து நெகிழ்ந்தேன். சுடுகாட்டில் நடந்த நிகழ்வுகள் என் படிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நான் ‘குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர், படிப்பை தேர்ந்தெடுத்தேன்” என்கிறார்.
டாக்டர் பிரியாவுக்கும்- டாக்டர் ராமச்சந்திரனுக்கும் பெற்றோர் பேசி முடித்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த சில வாரங்களிலே புதுமணத்தம்பதிகள் அடுத்த கட்ட மருத்துவ படிப்புகளுக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு டாக்டர் பிரியா ராமச்சந்திரனுக்குள் எழுந்த சில கேள்விகளும், உந்துதலும்தான் அவரை ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை யளிக்கும் சேவையாளராக உருவாக்கியிருக்கிறது. (இந்த டாக்டர் தம்பதிகளுக்கு ஹரி, கேசவ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்)
“நான் இங்கிலாந்தில் பொது அறுவை சிகிச்சை பற்றி படித்துவிட்டு, அமெரிக்காவில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பற்றி படித்துக்கொண்டிருந்தேன். அங்கு கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு கீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகள் அளிப்பதற்காக, நெஞ்சுப்பகுதியில் ஆபரேஷன் செய்து சருமத்திற்கு கீழே ‘கீமோ போர்ட்’ என்ற சிறிய கருவியை பொருத்துவோம். அதன் மூலம் மருந்து செலுத்தப் படும்போது அது நேரடியாகவே இதயத்திற்கு சென்றுவிடும். இது விரைந்து பலனளிக்கும். வருடத்திற்கு நானே 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அதை பொருத்தும் ஆபரேஷனை செய்திருக்கிறேன். அதன் மூலம் மருந்துகள் செலுத்தி, எப்படியாவது அந்த குழந்தையை ரத்த புற்றுநோயில் இருந்து காப்பாற்றிவிடுவோம். 2001-ம் ஆண்டில் அந்த கீமோபோர்ட்டின் விலை கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்.
அந்த காலகட்டத்தில் நான் சென்னைக்கு வந்தேன். அப்போது இங்கு பெரும்பாலும் பொது மருத்துவர்களே குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சையும் அளித்துக்கொண்டிருந்தார்கள். கீமோ போர்ட் பற்றி கேட்டால், அதன் விலை மிக அதிகம் என்றார்கள். தன் குழந்தைக்கு ரத்த புற்றுநோய் என்றாலே பெற்றோர் பயந்துபோனார்கள். அந்த சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும், செலவு செய்தாலும் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆக இந்த சிகிச்சையில் பணம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்தேன். ஒரு குழந்தை அமெரிக்காவில் பிறக்கிறது. அதுபோன்ற இன்னொரு குழந்தை இந்தியாவில் ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறது. அங்கு பிறந்த குழந்தைக்கு கீமோ போர்ட் போன்றவைகளை பொருத்தி, உயர்ந்த சிகிச்சையளித்து காப்பாற்றிவிடுகிறார்கள். இங்கு பணமில்லாததால் அந்த குழந்தையின் உயிருக்கு கியாரண்டி இல்லாத நிலை ஏற்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய அவலம்.
அந்த அவலத்தை மாற்றி, ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை களுக்கு இலவசமாக உயர்ந்த சிகிச்சை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ரே ஆப் லைட் பவுண்ட்டேஷனை’ ஆரம்பித்தேன். இந்த நோய்க்கு 2 முதல் 3 வருடம் சிகிச்சை தேவைப்படும். கிட்டத்தட்ட ஒரு குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதுவரை 123 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். அவர்கள் வளர்ந்து, நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த நோய் பாதித்தவர்களில் 85 சதவீதம்பேரை பிழைக்க வைத்துவிட முடியும். எங்கள் குழுவை சேர்ந்த டாக்டர் ஜூலியஸ் சேவியர் ஸ்காட் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கிறார்.
எங்களது சேவையை உணர்ந்து இப்போது பண உதவி செய்கிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ரத்த புற்றுநோய் பாதித்த அதிக எண்ணிக்கையிலான ஏழைக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். பிறந்த குழந்தையில் இருந்து 18 வயது வரை உள்ளவர்கள் எங்களிடம் இலவச சிகிச்சை பெறலாம். தேவைப்படுகிறவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் எங்களை அணுகலாம்” என்று கூறும் டாக்டர் பிரியா ராமச்சந்திரன், குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?’ என்றும் சொல்கிறார்.
“அடிக்கடி சளி பிடிப்பது, அவ்வப்போது ஜுரம் ஏற்படுவது, சாப்பிடமுடியாமல் இருப்பது, எப்போதும் சோர்ந்த நிலையில் இருந்தால் உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனை செய்யுங்கள். அது ரத்த புற்று நோயாக இருந்தால் அப்போதே கண்டுபிடித்துவிடலாம்.
ரத்த புற்றுநோய்க்கான காரணம் இதுவரை விஞ்ஞானபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சைல்ட் டிரஸ்ட் மெடிக்கல் ரிசர்ச் பவுண்ட் டேஷனுடன் இணைந்திருக்கிறோம். இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யில், பேராசிரியர் மகாலிங்கம் தலைமையில் ‘நேஷனல் கேன்சர் பயோ பேங்க்’ என்ற பெயரில் அந்த ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிறோம். ஆராய்ச்சி முடிவில், காரணங்கள் தெரிய வரலாம்” என்கிறார் டாக்டர் பிரியா ராமச்சந்திரன். இவர் எழுத்தாற்றலும் கொண்டவர். ‘ராமாவதாரமும் ராமாயணமும்’ என்ற நூலை, துயரமடையும் மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இலவசமாக இவர் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தாலும், குழந்தைகள் தங்கி சிகிச்சை பெற இடம் வசதியில்லாமல் இருக்கிறது. வசதியுள்ளவர்கள் இடம் வழங்கினால் பயன்படுத்திக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்.