மராட்டியத்தில் இலவச ‘லைப்லைன்’ மருத்துவ ரெயில் சேவை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைக்கிறார்
மராட்டியத்தில் இலவச ‘லைப்லைன்’ மருத்துவ ரெயில் சேவையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைக்கிறார்.
மும்பை,
மராட்டியத்தில் இலவச ‘லைப்லைன்’ மருத்துவ ரெயில் சேவையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைக்கிறார்.
‘லைப்லைன்’ எக்ஸ்பிரஸ்கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும், குழந்தைகளும் நவீன மருத்துவ சேவை வசதிகளை பெறும் வகையில், இம்பேக்ட் இந்தியா பவுண்டேஷன் என்ற தனியார் அமைப்பு அவர்களுக்கு ரெயில் மூலம் மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறது.
‘ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இலவச மருத்துவ ரெயில், உலகிலேயே முதல் மருத்துவ ரெயில் என்ற புகழை பெற்றிருக்கிறது. இந்திய ரெயில்வே மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த ரெயில் சேவை மேம்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து, 25 ஆண்டுக்கும் மேலாகி விட்டது.
தொடக்க விழாஇந்த ‘லைப்லைன்’ எக்ஸ்பிரஸ் சேவை தற்போது மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் ரெயில் நிலையத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டு, அங்குள்ள மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது.
இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ‘வீடியோ கான்பெரன்ஸ்’ வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
மொத்தம் 7 பெட்டிகளை கொண்ட இந்த மருத்துவ சேவை ரெயிலில், கண்பார்வையை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்க செய்தல், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் குறைபாடுகளை களையவும், காது கேளாதோருக்கு கேட்கும் திறனை மீட்கவும், உதடு பிளவு ஏற்பட்டவர்கள் புன்னகையை வெளிக்கொண்டு வருவதற்கும் ஆன அனைத்து சிகிச்சை வசதிகளும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.