திருமணத்துக்கு பணம் இல்லாததால் விவசாயி மகள் கிணற்றில் குதித்து தற்கொலை
லாத்தூரில் விவசாயி மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.
மும்பை,

விவசாயி மகள் திருமணம்
லாத்தூர் மாவட்டம் வாகோலி அருகே உள்ள பிசே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கட் (வயது 54). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. வறட்சி, பருவம் தவறிய மழையால் வெங்கட்டிற்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அவரால் தனது 3-வது மகளான சீத்தல் (21) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் தவித்துவந்தார். எனவே அவர் மகளின் திருமணத்திற்காக பலரிடம் கடன் கேட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பால் வாங்கி வருவதாக கூறி சீத்தல் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி அலைந்தனர். அப்போது வீட்டருகே உள்ள கிணற்றின் பக்கத்தில் சீத்தலின் செருப்பு, பால் செம்பு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சீத்தல் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியில் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சீத்தலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
மேலும் சம்பவ இடத்தில் இருந்து சீத்தல் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாவது:-
எனது தந்தை கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி, ஆலங்கட்டி மழையால் விவசாயத்தில் பெருத்த நஷ்டத்தை சந்தித்தார். இந்தநிலையில் அவர் எனக்கு திருமணம் செய்து வைக்க பணமில்லாமல் பலரிடம் கடன் கேட்டார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. எனது திருமணத்தை செய்து வைக்க தந்தை படும் கஷ்டத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. எனது தந்தை சுமையை குறைக்கவே இந்த முடிவை எடுத்தேன்.
இவ்வாறு அதில் உருக்கமாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து லாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.