சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து டி.டி.வி.தினகரன்-அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளருமான சசிகலாவின் அண்ணன் வினோதகன். இவருடைய மகன் மகாதேவன்(வயது47). இவர் தஞ்சை அருளானந்த நகரில் வசித்து வந்தார். நேற்றுகாலை கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி வந்து கொண்டிருந்த மகாதேவன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாரடைப்பால் சாவு
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் தஞ்சையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து மகாதேவனின் சித்தப்பா திவாகரன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்றுமாலை தஞ்சைக்கு வந்த அ.தி.மு.க.(அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மகாதேவன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் அஞ்சலி
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் துரைக்கண்ணு, ராஜேந்திரபாலாஜி, தங்கமணி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ரெங்கசாமி எம்.எல்.ஏ. மன்னார்குடி நகர சபை முன்னாள் தலைவர் சிவராஜமாணிக்கம், தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் அஞ்சலி செலுத்தினர். கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
மகாதேவனுக்கு சித்ராதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் கிருத்திகா எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 2-வது மகள் சுராதின்கா 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தார். இவரது உடல் தகனம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை கரந்தை ராஜாகோரி மயானத்தில் நடக்கிறது.