குளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலி; 10 பேர் படுகாயம் கேரளாவை சேர்ந்தவர்கள்
கேரளாவை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த போது குளத்தில் கார் கவிழ்ந்து பெண் பலியானார். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாய்மேடு,
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஷாஷிமேத்யூ. இவருடைய மனைவி சீனி (வயது39). இவர்கள் குடும்பத்தினர் 11 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு காரில் வந்துள்ளனர். நேற்று காலை நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓடாச்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு குளத்தில் கார் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் காரில் சிக்கியிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று அவர்களை மீட்டனர்.
பெண் பலி
படுகாயம் அடைந்த 11 பேரை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 10 பேரையும் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.