தண்டவாள பராமரிப்பு பணி: திருச்செந்தூர்–பழனி–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் தாமதமாகச்செல்லும்

தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக, திருச்செந்தூர்–பழனி–பாலக்காடு பாசஞ்சர் ரெயில் ஜூன் 1–ந் தேதி வரை தாமதமாக இயக்கப்பட உள்ளது.

Update: 2017-04-15 23:00 GMT

மதுரை,

விருதுநகரை அடுத்த துலுக்கப்பட்டி–சாத்தூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக அந்த பாதையில் பாசஞ்சர் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூர்–பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜூன் மாதம் 1–ந் தேதி வரை திருச்செந்தூரில் இருந்து காலை 11.10 மணிக்கு பதிலாக மதியம் 12.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.

மதுரை ரெயில்நிலையத்துக்கு மாலை 4 மணிக்கு பதிலாக 1½ மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரெயில் பழனி ரெயில்நிலையத்துக்கு இரவு 7.20 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கு சென்றடையும்.

பாலக்காடு பாசஞ்சர்

இந்த ரெயில், பழனியில் இருந்து பாலக்காடு வரை தொடர்ந்து பாசஞ்சர் ரெயிலாக(வ.எண்.06770) இயக்கப்படுகிறது.

அதன்படி, பழனி–பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.06770) பழனியில் இருந்து இரவு 7.25 மணிக்கு பதிலாக இரவு 8.55 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சி ரெயில்நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

ஆனால், வியாழக்கிழமைகளில் மட்டும் வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

டேராடூன் எக்ஸ்பிரஸ்

இதேபோல், டேராடூன் ரெயில்நிலையத்தில் பிளாட்பார பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மதுரை–டேராடூன் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து டேராடூன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12687) இன்று (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 19–ந் தேதி, 23–ந் தேதி, 26–ந் தேதி, 30–ந் தேதி, வருகிற மே மாதம் 3–ந் தேதி, 7–ந் தேதி, 10–ந் தேதி, 14–ந் தேதி, 17–ந் தேதிகளில் ஹரித்துவார்–டேராடூன் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் டேராடூன்–மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.12688) வருகிற 21, 24, 28–ந் தேதிகளிலும், வருகிற மே மாதம் 1,5,8,12,15,19, 22–ந் தேதிகளில் டேராடூன்–ஹரித்துவார் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் பாசஞ்சர்

நாகர்கோவில்–கோவை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56319) வருகிற 18–ந் தேதி மட்டும் ஈரோடு ரெயில்நிலையத்தில் இருந்து சுமார் ½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்