குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழர் தேசிய முன்னணி அறிவிப்பு

தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் இளமாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2017-04-15 22:45 GMT

காரைக்குடி,

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் மாற்று இடத்தில் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்பதற்காக, குடியிருப்பு பகுதிகளில் கடைகளை திறக்கும் வேலையை அரசு தரப்பு செய்து வருகிறது. அந்தந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்டு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தும், அதனை மதிக்காமல் மதுக்கடைகள் திறக்க முயற்சி நடந்து வருகிறது. மேலும் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை காவல் துறை துணையோடு மிரட்டி மதுக்கடைகளை திறக்கப்பட்டு வருகிறது. அரசின் இதே நிலை தொடர்ந்தால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்