வெம்பாக்கத்தில் 4,224 பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் தூசி மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்
வெம்பாக்கத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா நடந்தது. விழா
வெம்பாக்கம்,
வெம்பாக்கத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பழனி தலைமை தாங்கினார். வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூசி மோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, முதற்கட்டமாக 4 ஆயிரத்து 224 பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கினார்.
இதில் மண்டல துணை தாசில்தார் ஜெயவேல், வட்ட வழங்கல் அலுவலர் பாபு, வருவாய் ஆய்வாளர் வடிவேல், வெம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.