இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றார்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் தலைவி சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தியை அவர் சந்தித்து பேச உள்ளார்.
பெங்களூரு,
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு மற்றும் குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதற்காக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருப்பதுடன், அவரை டெல்லிக்கு வரும்படி அழைத்தனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் முதல்-மந்திரி சித்தராமையா டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் மாநில தலைவரும், மந்திரியுமான பரமேஸ்வர், செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
சோனியாவை இன்று சந்திக்கிறார்
டெல்லியில் வைத்து இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங் ஆகியோரை முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேச உள்ளார். இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால், கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதனால் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்கும்போது மந்திரிசபை விரிவாக்கம் பற்றி சித்தராமையா பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக மந்திரிசபையில் 2 இடங்கள் காலியாக இருப்பதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருப்பதாலும், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு கட்சி மேலிடம் அனுமதி வழங்கினால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் மந்திரி மகாதேவ பிரசாத்தின் மனைவி கீதாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.