பரமத்திவேலூர் பகுதியில் ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு

பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ரே‌ஷன்கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

Update: 2017-04-14 22:30 GMT

பரமத்தி வேலூர்,

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள பொத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொத்தனூர் ரே‌ஷன்கடை, தேவராயபுரம் ரே‌ஷன்கடை, பாண்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள உரம்பூர் ரே‌ஷன்கடை, பாண்டமங்கலம் ரே‌ஷன்கடை, வெங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கொளக்காட்டுப்புதூர் ரே‌ஷன்கடை உள்ளிட்ட பல்வேறு ரே‌ஷன்கடைகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் பதிவேடுகளை சரிபார்த்தார்.

மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களை தரமாகவும், எடையளவு குறையாமலும் ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முழுமையாக வழங்கிட வேண்டுமெனவும், ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டு வரப்பெற்ற அனைத்து நபர்களுக்கும் உடனுக்குடன் ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகளை வழங்கிட வேண்டுமெனவும் விற்பனையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்கண்ணா, பறக்கும்படை துணை தாசில்தார் பச்சமுத்து உள்பட வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகள் வினியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 633 ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகள் வரப்பெற்று தொடர்ந்து வினியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு மட்டும் 10 ஆயிரத்து 643 ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகள் வரப்பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்